Wednesday 23 November 2011

இறுதி ஆட்டத்தில் கொக்குவில் மத்திய சன சமூக(K.C.C.C) அணி

யாழ். மத்திய விளையாட்டுக் கழகம், ஜோர்ஜ் பெப்ஸ்ரார் வெற்றிக்கிண்ணத்திற்காக இரண்டாவது ஆண்டாக நடத்தும் யாழ்.நகரில் சிறந்த துடுப்பாட்ட அணிக்கான தரப் படுத்தலில் 01.01.2011 முதல் 02.10.2011 வரையான காலப் பகுதியில் நடைபெற்ற 104 போட்டிகளின்படி யாழ். பல் கலைக்கழக அணி 56 புள் ளிகளைப்பெற்று முதலாவது இடத்தில் உள்ளது. 49.5 புள்ளி களைப்பெற்று ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் இரண்டாவது இடத்திலும், 43 புள்ளிகளைப் பெற்று கொக்குவில் மத்திய சன சமூக(K.C.C.C) அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. மற்றையஅணிகள் பெற்ற புள்ளிகள்:
யாழ்.ஜொனியன்ஸ் விளை யாட்டுக் கழக அணி (23 புள் ளிகள்),
பற்றீசியன்ஸ் விளை யாட்டுக் கழக அணி (22 புள் ளிகள்),
சிறிகாமாட்சி விளை யாட்டுக்கழகம் (18 புள்ளி கள்),
கிறிஸ்தோப்பர் விளை யாட்டுக்கழகம் (17.5 புள்ளி கள்),
சென்றலைட்ஸ் விளை யாட்டுக்கழக அணி (17 புள்ளி கள்),
யாழ். சென்றல் விளை யாட்டுக்கழக அணி (16.5 புள்ளிகள்),
ஸ்கந்தா ஸ்ரார் விளையாட்டுக்கழகம் (16 புள் ளிகள்),
யூனியன் விளையாட் டுக்கழகம் (11.5 புள்ளிகள்),
திருநெல்வேலி கிரிக்கெட் அணி (10 புள்ளிகள்),
மானிப் பாய் பரிஷ் விளையாட்டுக் கழக அணி (10 புள்ளிகள்),
நியூஸ்ரார் விளையாட்டுக்கழக அணி (7 புள்ளிகள்),
ஸ்ரான்லி விளையாட்டுக்கழகம் (5புள்ளிகள்),
அரியாலை சென் றல் விளையாட்டுக்கழக அணி (3 புள்ளிகள்),
ஓல்ட் கோல்ட் விளையாட்டுக்கழக அணி (1.5 புள்ளிகள்),
வளர்மதி விளையாட்டுக்கழக அணி (புள்ளிகள் இல்லை),
கே.ஸி. ஸி.ஸி "பி' அணி (புள்ளிகள் இல்லை).

இந்த அணித்தெரிவில் முதலாம் இடத்தைப் பெறும் அணிக்கு ஜோர்ஜ் பெப்ஸ்ரார் வெற்றிக் கிண்ணமும் 10 ஆயிரம் ரூபா பணப் பரிசிலும் வழங்கப்படும். கடந்த வருடம் இடம் பெற்ற தரப்படுத்தலில் யாழ். பல்கலைக்கழக அணி 44 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.இந்தத் தரப்படுத்தலில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறுதி யில் இடம்பெறும் முக்கோண சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெறும் எனப் போட்டி ஏற்பாட் டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Monday 28 March 2011

சபாலிங்கம் கிண்ணத்தை கொக்குவில் இந்து சுவீகரித்தது.


ஏற்கனவே இந்துக்களின் சமரில் வெற்றி வாகை சூடிய கொக்குவில் இந்துக் கல்லூரி யாழ் இந்துவுடன் வருடம் தோறும் நடக்கும் சபாலிங்கம் கிண்ணத்திற்கான ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியாராகவும் உப அதிபராகவும், யாழ் மத்திய கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் அதிபராகவும் கடமையாற்றிய விளயாட்டு வீரரும் யாழ் பாடசாலை விளையாட்டுக் கழகத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றியவருமான திரு இ. சபாலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடக்கும் வருடாந்த 50 ஓவர் துடுப்பெடுத்தாட்டப் போட்டி மார்ச் 26-ம் திகதி சனிக்கிழமை கொக்குவில் இந்து மைதானத்தில் நடந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி சகல இலக்கினையும் இழந்து 49 பந்து பரிமாற்றம் முடிவில் 306 ஓட்டங்களைப் பெற்றது.ராகுலன் 72, திவாகர் 52, சம்பவன் ஆட்டம் இழக்காமல் 32, சத்தியன் 42, பங்குஷன் 21, உத்தமகுமரன் 22 தமது அணி சார்பாக ஓட்டங்களைப் பெற்றனர்.பந்து வீச்சில் யஸ்மினன் 10 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களையும் வாமணன் ஒன்பது ஓவர்கள் பந்து வீசி 53 ஓட்டங் களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் சாய்த்தனர். 306 ஓட்டங்களை நோக்கி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ். இந்துக் கல்லூரி அணியின் ஆரம்ப இலக்குகள் சொற்ப ஓட்டங்களில் சாய்க்கப்பட்டன. நீருஜனும் செந்தூரனும் இணைந்து தமது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி யாழ். இந்துக்கல்லூரியுடைய ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இந்தச் சோடி இணைப்பாட்ட ஓட்டமாக 108 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டது. யாழ்.இந்துக்கல்லூரி அணி 46 பந்துப் பரிமாற்றங்களுக்கு அனைத்து இலக்கினையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. நிருஷன் 88 ஓட்டங்களையும் செந்தூரன் 50 ஓட்டங்களையும் சஜீபன் 35 ஓட்டங்களையும் தமது அணிசார்பாகப் பெற்றுக் கொடுத்தனர். கொக்குவில் இந்துக் கல்லூரி அணி வீரர்களான கார்த்திக் 5 விக்கெட்டுக்களையும் ராகுலன் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர். சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த திருஷன் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கார்த்திக் தெரிவு செய்யப்பட்டார்.சிறந்த களத்தடுப்பாளராக கொக்குவில் இந்துக் கல்லூரி அணித்தலைவர் உத்தமகுமரன் தெரிவு செய்யப்பட்டார்.சிறந்த ஆட்டநாயகனாக கொக்குவில் இந்துக் கல்லூரி யைச் சேர்ந்த ராகுலன் தெரிவு செய்யப்பட்டார்.


Wednesday 9 February 2011

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு விமானப்படை தொண்டர் பயிற்சி.




கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் இரண்டு வார காலத்திற்கான விமானப்படை தொண்டர் பயிற்சியைப் பெறுவதற்காக தியத்தலாவை விமானப்படை முகாமிற்குச் சென்றுள்ளனர்.

முதல் முறையாக நாடளாவிய ரீதியில் விமானப்படையணி பாடசாலை மாணவாகளுக்கான விமானப் பயிற்சிகளை வழங்கவுள்ளது. இதில் வட மாகாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி விமானப்படை தொண்டர் பயிற்சியைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது