Friday, 20 November 2009

யாழ் இந்துவை வீழ்த்தி கொக்குவில் இந்து சம்பியன் ஆகியது


யாழ் இந்துக் கல்லூரி உதைபந்தாட்ட அணியை சமநிலை உடைப்பு உதையில் நாலுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொக்குவில் இந்துக் கல்லூரி 16 வயதிற்கு உட்பட்ட உதைபாந்தட்டத்திற்கான சம்பியன் ஆனது. நல்லூர் கோட்ட மட்டப் பாடசாலைகளுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் கொக்குவில் இந்து உதை பந்தாட்ட அணி இதைச் சாதித்துள்ளது.

ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும் ஒரு அணிக்கு மறு அணி விட்டுக் கொடுக்காமலும் நடந்தது. இதனால் இரு அணிகளுக் தலா ஒரு கோல் பெற்று சம நிலையில் இருந்தன. சமநிலை உடைப்பு உதையில் (penalty shoot-out) கொக்குவில் இந்து வெற்றி பெற்றது