Thursday, 12 February 2009

முறையேதும் இல்லை

இராகம்: ராக மாலிகா தாளம் ஆதி

பல்லவி
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை நாராயண தேவா

அநுபல்லவி
சிங்களவன் பின் நிற்கின்ற சிவ சங்கரநாதா
சிங்களவன் பின் நிற்கின்றதில்
முறையேதும் இல்லைசிவசங்கர நாதா
நாராயண தேவா

சரணம்
இத்தாலியில் இருந்து வந்தாள் ஒருத்தி ஏழரைச் சனியா
ஒருதாலி போனதற்கு பலதாலி கேட்கு மொரு கள்ளியா
சிவசங்கர நாதா............. நாராயண தேவா........- ஆனாலும்
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
மறையோதுவோர் சொல்வது கேட்கும் நாராயணா-ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா

கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்
கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்- ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா
மும்பையில் முறையாக உதை வாங்கிய பின்னும்
அரியணையில் அழகாக இருக்கும் நாராயணா
சிவசங்கர நாதா நாராயண தேவா

Wednesday, 11 February 2009

தினம் பாடவிது


எதுவிது எனக்கேயிது
மாதிது நல் மதுவிது
குளிரிது இளம் தளிரிது
மலரிது எனை மயக்குது
கொடியிது மிகக் கொடியது
அணைக்கவிது தீ அணைக்குது
துணைக்கிது மனம் துளைக்குது
பனிக்கிது மிக இனிக்குது
கனியிது மெல்லக் கனியுது
உடையது பெரும் தடையது
இடையது தான் எங்குளது
இணையுது எதற்கிணையிது
தொடவிது என்றும் தொடருது
நாடவிது சுகம் தேடவிது
தடவவிது தினம் பாடவிது