எதுவிது எனக்கேயிது
மாதிது நல் மதுவிது
குளிரிது இளம் தளிரிது
மலரிது எனை மயக்குது
கொடியிது மிகக் கொடியது
அணைக்கவிது தீ அணைக்குது
துணைக்கிது மனம் துளைக்குது
பனிக்கிது மிக இனிக்குது
கனியிது மெல்லக் கனியுது
உடையது பெரும் தடையது
இடையது தான் எங்குளது
இணையுது எதற்கிணையிது
தொடவிது என்றும் தொடருது
நாடவிது சுகம் தேடவிது
தடவவிது தினம் பாடவிது
Hi
ReplyDeleteஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.
உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்