
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற P. S குமாரசாமி ஞாபகார்த்த "20-20" ; காலிறுதி ஆட்டத்தில் சென்ரல் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் மத்திய சனசமூகநிலைய விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ரல் விளையாட்டுக்கழகம் 08 விக்கெட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றது. ரஜீவ் 19 ஓட்டங்களையும் ஜசிந்தன் 14 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 09 ஓட்டங்களும் பெறப்பட்டன. கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த றதீஸ்கரன் 04 ஓவர்கள் பந்து வீசி 09 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், றொபேசன் 3.2 ஓவர்கள் பந்துவீசி 11 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், தீபன் 04 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவருடன் 15 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், பிரதீபன், இராகுலன் முறையே 16, 17 ஓட்டங்களைக் கொடுத்து தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
87 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகம் 11.1 ஓவரில் 03 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. சசி, சபானந் ஆகியோர் தலா 20 ஓட்டங்களையும் வல்லவக்குமரன் 14 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 24 ஓட்டங்களும் பெறப்பட்டன.
சென்ரல் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ஜயந்தன் 04 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும்,விமலகாந் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்
No comments:
Post a Comment
Give us your comments about our articles concisely and lucidly