Saturday, 1 November 2008

கையாலாகாத தமிழ்நாடு.

பலத்த ஆதரவு
தமிழ்நாட்டு நடிகர்கள் ஒன்று கூடி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உண்ணா விரத மொன்றை 01-11-2008 சனிக்கிழமை ஏற்பாடு செய்தனர். பல நடிகர்களும் கலந்தது கொண்டது மிகச்சிறப்பாக இருந்தது. ஸ்ரேயா பிரியாமணி நமீதா ஆகியோர் பங்கு பற்றாதோரில் முக்கியமானோர்.

பலத்த கட்டுப்பாடு – சிங்களவர்களுக்கு பயந்தா?
இவர்கள் எல்லோரும் ஒன்றை முக்கியமாகச் சொன்னார்கள் தமது உரைக்கு கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது என்று. மன்சூர் அலிகான் வாய் பேச முடியாதவர் போல் பேசி தனக்கு வாய்பூட்டு போடப்பட்டிருப்பதை வெளிக்காட்டினார். விவேக் சொன்னார் இதை உண்ணா விரதம் என்று சொல்வதிலும் பார்க்க மெளன விரதம் என்றுதான் சொல்ல வேண்டும் அத்தனை கட்டுப்பாடு தங்களது உரைக்கு என்று. அவர்கள் கடுமையாகப் பேசினால் சிங்கள இராணுவம் மேலும் மூர்கத்தனமாக தமிழ்நாட்டு மீனவரைக் கொல்லுமாம். இது தமிழ்நாடு சிங்களவர்களுக்கு பயப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அல்லது இந்த கட்டுப்பாடு மத்திய அரசில் இருந்து வந்ததா? ஆக மொத்தத்தில் அங்கு பேச்சுரிமை இருந்திருக்கவில்லை.

கண்ணீர் மட்டும்தான் வடிக்க முடியும்.
1956 இல் இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அறிஞர் அண்ணா சொன்னார் தான் இருக்கும் நிலையில் தன்னால் ஒரு சொட்டுக் கண்ணீர் மட்டும் தான் இலங்கைத் தமிழர்களுக்காக வடிக்க முடியும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது கையில் அதிகாரம் இல்லாதவரை இலங்கைத் தமிழர் துயர் துடைக்க ஒன்றுமே செய்ய முடியாது. சுய நிர்ணய உரிமை இல்லாதவர்களால் எமக்கு சுய நிர்ணய உரிமை பெற்றுக் கொடுக்க முடியாது.

No comments:

Post a Comment

Give us your comments about our articles concisely and lucidly