கொல்லக் கொடுவாள் கொடுப்பார்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்
சாத்தான்கள் ஓதும் வேதம்
மொழியுரிமை பறித்தார்களா
கல்வியுரிமை பறித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
நூல்நிலையங்கள் எரித்தார்களா
பாடசாலைகள் அழித்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
வீடுகளைக் கொழுத்தினார்களா
வீதியில் விட்டார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
. ... சமாதானமாய்ப் போங்கள்
கொதிதாரில் போட்டார்களா
கொடுமைகள் செய்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
குழந்தைகளைக் கொன்றார்களா
குமரிகளை கெடுத்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
. ...சமாதானமாய்ப் போங்கள்
முழு இனமே அழியப் போகிறதா
முழு சொத்துமே எரியப் போகிறதா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
வந்தேறு குடி யென்றார்களா
வரலாற்றைத் திரித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
No comments:
Post a Comment
Give us your comments about our articles concisely and lucidly