மனம் மகிழும் போது அணைக்க உன் உடல்
மனம் துவளும் போது சாய்ந்திட உன் தோள்
மனம் அழுதிடும் போது துடைக்க உன் கரம்
மனம் தூங்கும் போது எழுப்பிட உன் முத்தம்.
என் மனதுக்குத்தான்
நீ முக்கியம்
உன் அன்புதான்
என் தேவை
அன்புடையாள் அருகிருந்தால்
எல்லாம் என்னோடிருக்கும்
அழகும் கவர்ச்சியும்
இரண்டாம் தெரிவே.
No comments:
Post a Comment
Give us your comments about our articles concisely and lucidly