Friday 7 November 2008

ஸ்கந்தாவை வீழ்த்திய கொக்குவில்

13 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டப் போட்டியில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியை கொக்குவில் இந்து வென்றுள்ளது. முதல் இனிங்ஸ்: கொக்குவில் 72 ஓட்டங்கள் ஸ்கந்தா 47 ஓட்டங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் கொக்குவில் 68 ஓட்டங்கள் 5 விக்கெட் இழப்புடன் ஆட்டத்தை நிறுத்தியது, ஸ்கந்தா 52 ஒட்டங்கள்.

Wednesday 5 November 2008

Kokuvil Hindu Girls Netball Team Won Championship

04/11/2008
The under 19 girls netball team of Kokuvil Hindu College won the the championship by beating Jaffna Hindu Ladies College. The Canadian University Services conducted a netball tournament in memory of its 10th anniversary among schools in the Jaffna region. Kokuvil thrashed Urupirai Hindu college and reached final. The final match took place in the playground of the University of Jaffna.
Both KHC and JHLC started the match in a very aggressive manner. However the girls of KHC tighten their grip and finished the first half with 19:7. In the second half JHLC could not stand agaisnt the sudden movements of KHC and became very tired. The KHC finished the second half with 18:5. The overall score 37:12

Monday 3 November 2008

பா(ர)த(க) கொடை

கொல்லக் கொடுவாள் கொடுப்பார்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்

சாத்தான்கள் ஓதும் வேதம்
மொழியுரிமை பறித்தார்களா
கல்வியுரிமை பறித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
நூல்நிலையங்கள் எரித்தார்களா
பாடசாலைகள் அழித்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
வீடுகளைக் கொழுத்தினார்களா
வீதியில் விட்டார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
. ... சமாதானமாய்ப் போங்கள்
கொதிதாரில் போட்டார்களா
கொடுமைகள் செய்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
குழந்தைகளைக் கொன்றார்களா
குமரிகளை கெடுத்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
. ...சமாதானமாய்ப் போங்கள்
முழு இனமே அழியப் போகிறதா
முழு சொத்துமே எரியப் போகிறதா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்

வந்தேறு குடி யென்றார்களா
வரலாற்றைத் திரித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்