Monday 28 December 2009

Monday 23 November 2009

KHC OSA UK's Vasantham - 09 Video Clips


Bharathanattyam .....................................................

Veena Recital



Song Kannalaney by Janany Arunachalam


Dance by Lavina Suthenthiran


Carnatic musin on Violin rendered by
Lavanya Loganathan
.



Carnatic vocal by Pairavy Rajendran and Shangary Rajendran

Friday 20 November 2009

யாழ் இந்துவை வீழ்த்தி கொக்குவில் இந்து சம்பியன் ஆகியது


யாழ் இந்துக் கல்லூரி உதைபந்தாட்ட அணியை சமநிலை உடைப்பு உதையில் நாலுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொக்குவில் இந்துக் கல்லூரி 16 வயதிற்கு உட்பட்ட உதைபாந்தட்டத்திற்கான சம்பியன் ஆனது. நல்லூர் கோட்ட மட்டப் பாடசாலைகளுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் கொக்குவில் இந்து உதை பந்தாட்ட அணி இதைச் சாதித்துள்ளது.

ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும் ஒரு அணிக்கு மறு அணி விட்டுக் கொடுக்காமலும் நடந்தது. இதனால் இரு அணிகளுக் தலா ஒரு கோல் பெற்று சம நிலையில் இருந்தன. சமநிலை உடைப்பு உதையில் (penalty shoot-out) கொக்குவில் இந்து வெற்றி பெற்றது

Monday 9 November 2009

KHC won first Floodlit Basketball Match


The girls team of KHC beat Uduvil Girls School in the firt match played at KHC's playground with newly installed flood lighting facilities.
In the first half of the match KHC girls dominated and leading UGS by 10:05. In the second half UGS faught back and pushed KHC down to 25:24. But at the last minute KHC girls scored 2 points by a penalty as a result of a UGS playes fault. At the end KHC won 26:25 in a nail biting match

Saturday 31 October 2009

P. S குமாரசாமி ஞாபகார்த்த "20-20" ; காலிறுதி ஆட்டத்தில் கொக்குவில் வெற்றி


யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற P. S குமாரசாமி ஞாபகார்த்த "20-20" ; காலிறுதி ஆட்டத்தில் சென்ரல் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் மத்திய சனசமூகநிலைய விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ரல் விளையாட்டுக்கழகம் 08 விக்கெட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றது. ரஜீவ் 19 ஓட்டங்களையும் ஜசிந்தன் 14 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 09 ஓட்டங்களும் பெறப்பட்டன. கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த றதீஸ்கரன் 04 ஓவர்கள் பந்து வீசி 09 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், றொபேசன் 3.2 ஓவர்கள் பந்துவீசி 11 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், தீபன் 04 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவருடன் 15 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், பிரதீபன், இராகுலன் முறையே 16, 17 ஓட்டங்களைக் கொடுத்து தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

87
ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகம் 11.1 ஓவரில் 03 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. சசி, சபானந் ஆகியோர் தலா 20 ஓட்டங்களையும் வல்லவக்குமரன் 14 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 24 ஓட்டங்களும் பெறப்பட்டன.

சென்ரல் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ஜயந்தன் 04 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும்,விமலகாந் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்

Sunday 27 September 2009

AGM of KHC OSA (U K)


Video footage of the AGM click on play sign to view:





Sunday 6 September 2009

KHC at TSSA UK's Summer Sports Festival


Click on the play sign to watch the video footage of KHC OSA UK in action.

Thursday 9 April 2009

வெற்றி தோல்வியின்றி முடிந்த இந்துக்களின் சமர்

இரண்டாவது ஆண்டாகவும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இம்முறை யாழ் இந்து மைதானத்தில் நடை பெற்ற இப் போட்டியில் கொக்குவில் இந்துவின் வீரர்கள் சிறப்பாக ஆடி பின் வரும் பரிசுகளைப் பெற்றனர்:

சிறந்த களத் தடுப்பாளர்: ஆர். பவீந்திரன்
சிறந்த பந்து வீச்சாளர்: கே. நிரோஜன்
ஆட்டநாயகன்: சி. உத்தமகுமாரன்.

யாழ் இந்துவைச் சேர்ந்த ஏ. பிரியதர்சன் சிறந்த துடுப்பாட்டக்கரராகத் தெரிவு செய்யப் பட்டார்.

Thursday 12 March 2009

Monday 16 February 2009

எல்லே சம்பியன் வென்ற கொக்குவில் மத்திய ச. ச

நல்லுார் பிரதேச பெண்களுக்கான எல்லே சம்பியன் கிண்ணத்தை வென்றது கொக்குவில் மத்தி சனசமூக நிலைய விளையாட்டுக் கழகம். இறுதிப் போட்டியில் கொக்குவில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழக அணியை வென்றுள்ளது.

Mahindha chinthanava


வெள்ளை வானில் போனவன்

கறுப்பு வானில் வந்தான்

கருத்துத் தெரிவித்தவன்

காணாமற் போனோர் பட்டியலில்

பாதுகாப்பு வலயத்தில்

யுத்த வலயத்தைவிடஅதிக கொலைகள்

இந்திய பலம் இணைந்த

மஹிந்த சிந்தனை

புரிகிறதா உங்களுக்கு

Thursday 12 February 2009

முறையேதும் இல்லை

இராகம்: ராக மாலிகா தாளம் ஆதி

பல்லவி
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை நாராயண தேவா

அநுபல்லவி
சிங்களவன் பின் நிற்கின்ற சிவ சங்கரநாதா
சிங்களவன் பின் நிற்கின்றதில்
முறையேதும் இல்லைசிவசங்கர நாதா
நாராயண தேவா

சரணம்
இத்தாலியில் இருந்து வந்தாள் ஒருத்தி ஏழரைச் சனியா
ஒருதாலி போனதற்கு பலதாலி கேட்கு மொரு கள்ளியா
சிவசங்கர நாதா............. நாராயண தேவா........- ஆனாலும்
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
மறையோதுவோர் சொல்வது கேட்கும் நாராயணா-ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா

கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்
கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்- ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா
மும்பையில் முறையாக உதை வாங்கிய பின்னும்
அரியணையில் அழகாக இருக்கும் நாராயணா
சிவசங்கர நாதா நாராயண தேவா

Wednesday 11 February 2009

தினம் பாடவிது


எதுவிது எனக்கேயிது
மாதிது நல் மதுவிது
குளிரிது இளம் தளிரிது
மலரிது எனை மயக்குது
கொடியிது மிகக் கொடியது
அணைக்கவிது தீ அணைக்குது
துணைக்கிது மனம் துளைக்குது
பனிக்கிது மிக இனிக்குது
கனியிது மெல்லக் கனியுது
உடையது பெரும் தடையது
இடையது தான் எங்குளது
இணையுது எதற்கிணையிது
தொடவிது என்றும் தொடருது
நாடவிது சுகம் தேடவிது
தடவவிது தினம் பாடவிது

Saturday 17 January 2009

Kokuvil CCC won championship














.

17/01/2009: Kokuvil Central Community Centre won Championship. Girls Team of Kokuvil CCC won championship in the basketball tournament conducted by the Jaffna District Basketball Association. Final score - 38:31
R. Vinojah of Kokuvil CCC was awarded as the player of the tournament.