Friday 10 February 2012

துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் இரு நூற ஓட்டங்கள் விளாசிய பங்குஜன்

அகில இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலான பிரிவு (III) க்கான முதலாம் சுற்றுப்போட்டி திங்கள், செவ்வாய்கிழமைகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த ஆட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதிக் கொண்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். இதற்கமைய தனது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 75 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் பங்குஜன் ஆட்டமிழக்காமல் 18 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 200 ஓட்டங்களையும், சந்தியன் 61 ஓட்டங்களையும், யனுதாஸ் 37 ஓட்டங்களையும், ராகுலன் 27 ஓட்டங்களையும் தமது அணி சார்பாகப் பெற்றனர்.

பந்து வீச்சில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி சார்பாக நிரேஷன் 16 ஓவர்கள் பந்து வீசி 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ரிஷிகரன் 22 ஓவர்கள் பந்து வீசி 83 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் , நிக்சன் 11 ஓவர்கள் பந்து வீசி 66 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், சேந்தன் 10 ஓவர்கள் பந்து வீசி 54 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், பிரதீபன் 5 ஓவர்கள் பந்து வீசி 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், பானுஷன் 2 ஓவர்கள் பந்து வீசி 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தனது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 31.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் பிரதீபன் 27 ஓட்டங்களையும், பானுஷன் 24 ஓட்டங்களையும், ரிஷிகரன் 14 ஓட்டங்களையும் தமது அணி சார்பாகப் பெற்றனர்.

பந்து வீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிசார்பாக பார்த்தீபன் 7 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், பங்குஜன் 8 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ராகுலன் 6 ஓவர்கள் பந்து வீசி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஆதித்தன் 3.5 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பவித்திரன் 5 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கொக்குவில் இந்துக் கல்லூரி அணித் தலைவர் மானிப்பாய் இந்துக் கல்லூரியை தொடர்ந்து துடுப்பெடுத்தாட அழைத்தார். இதற்கமைய தனது 2வது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 32.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மட்டும் பெற்றது.

இதில் நிக்ஷன் 31 ஓட்டங்களையும், கிரிசாந் 23 ஓட்டங்களையும், பானுஷன் 18 ஓட்டங்களையும், சபேசன் 13 ஓட்டங்களையும் தமது அணி சார்பாகப் பெற்றனர்.
பந்து வீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிசார்பாக

பங்குஜன்   9.4 ஓவர்கள் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும்,
ராகுலன்     8 ஓவர்கள்  19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும்,
பவித்திரன் 6 ஓவர்கள்  19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும்,
ஆதித்தன்  5 ஓவர்கள்  7 ஓட்டங்களுக்கு    1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கொக்குவில் இந்துக் கல்லூரி அணிஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment

Give us your comments about our articles concisely and lucidly